சென்னை;
வாரி கொடுத்த வள்ளல் எம்ஜிஆருடன் நடித்த நடிகரின் குடும்பத்தின் வறுமையை போக்க முதல்வர் உதவிசெய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் பசி நாராயணன். இவரது மறைவுக்கு பின்னர் இவரது குடும்பத்தினரை வறுமையின் கொடிய கரங்கள் பிடித்து ஆட்டியது.
இதுகுறித்த தகவல் முதல்வர் ஜெயலலிதாவை எட்டியது. தலைவருடன் நடித்தவரின் குடும்பத்திற்கு இந்த நிலையா என்று மனம் வேதனையடைந்து முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து பசி நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி அந்த குடும்பத்தின் வறுமையை போக்க கண்டிப்பாக உதவும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதற்காக பசிநாராயணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.