சென்னை:
பிரச்னைன்னு வந்தா சினிமா நடிகர்கள்தான் முதலில் கேட்கணும் என்ற எண்ணம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதற்காக இப்படியா... என்றுதான் கேட்க தோன்றுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் சினிமாகாரர்கள் தான் கேட்க வேண்டும். அப்படி நம் மக்களின் மனநிலை அப்படி மாறியுள்ளது.
தற்போது காவிரி பிரச்னைக்கு கூட வழக்கம் போல் ரஜினிகாந்த் என்ற தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளனர். அவர் கர்நாடகாவை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டும் என ஒரு சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
அதுமட்டுமா? சரத்குமார் தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார், அந்த படத்திலிருந்து அவர் விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். என்னங்க இது நியாயம். நல்லா யோசனை செய்து பேசுங்க...