'மங்காத்தா' திரைப்படத்தில் அஜித்தை தேடும் சின்சியர் போலீஸ் ஆபிஸராக நடித்தவர் அர்ஜுன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனையடுத்து அவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில், அவர் தற்போது 'நிபுணன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்தின் 'சால்ட் அண்ட் பெப்பர்' ஹேர் ஸ்டைலை அவர் பின்பற்றியுள்ளார். 


மேலும் இந்த படத்தில் அவர் போலீஸ் டி.எஸ்.பி- யாக நடித்துள்ளார். இதில் பிரசன்னா, வரலக்ஷ்மி ஆகியோர் அர்ஜுனின் உதவியாளராக நடித்துள்ளனர். போலீஸ் கதையை கொண்டு இப்படம் உருவாகியுள்ளன. 


இந்த படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். பாசன் பிலிம் பாக்டரி தயாரித்துள்ளது. இதில் சுஹாசினி மணிரத்னம், சுமன், வைபவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன. 


మరింత సమాచారం తెలుసుకోండి: