சென்னை:
அடுப்பை பற்ற வைக்கிறதுக்கு முன்னாடியே சாப்பாடு விலைக்கு போய்விட்டால் எப்படி சந்தோஷமாக இருக்கும் அப்படிதான் இருக்கிறது இந்த விஷயமும். 


என்ன தெரியுங்களா? ரெமோ படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் சிவகார்த்தியின் கிராப் கிடுகிடுவென்று வளர்ந்துக்கிட்டே வருது. எப்படி தெரியுங்களா?


சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடியை வைத்து மோகன்ராஜா ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இனிதான் போட்டோ செஷனே எடுக்க உள்ளனர். ஆனால் அதற்குள் இந்த படத்தை விலைக்கு வாங்க 3 கம்பெனிகள் உள்ளேன் அய்யா என்று இப்பவே என்ட்ரி போட்டுள்ளதாம்.


இப்ப தெரியுதா... அடுப்பை பற்ற வைக்கிறதுக்கு முன்னாடியே சாப்பாடு விலை போகுதுன்னு.


మరింత సమాచారం తెలుసుకోండి: