கோவை:
காட்டு யானை வழிமறித்து தாக்கியத்தில் காவடி எடுத்துச் சென்ற பக்தர் பரிதாபமாக பலியானார்.


கோவையை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பதால் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


இக்கோயிலுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), அவரது மனைவி பழனியம்மாள் (50) உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஐந்து பேர் காவடி எடுத்து சென்று கொண்ருந்தனர்.


பூண்டி அடிவாரம் அருகே பாலத்தின் நடந்து சென்ற போது காட்டு யானை ஒன்று வழிமறித்துள்ளது. யானையைக் கண்ட அவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். ஆனால் யானையிடம் சுப்பிரமணியும், பழனியம்மாளும் சிக்கி கொண்டனர். இதில் யானை தாக்கியதில் சுப்பிரமணி பலியானார். பழனியம்மாளும் படு காயமடைந்தார்.


உடன் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: