ரியோ:
ரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டி நடுவர்களின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க குத்துச்சண்டை பயிற்சியாளர் பில்லி வால்ஷ் குற்றம் சாட்டியதுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை ரஷிய வீராங்கனைக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவின் மிக்கெலா மேயர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால் நடுவர்களின் இந்த முடிவு முட்டாள்தனமானது.


மேலும் ரஷியா-கஜகஸ்தான் வீரர்களுக்கு இடையே நடந்த இன்னொரு போட்டியில் கஜகஸ்தான் வீரர் வெற்றி பெறுவார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் ரஷிய வீரர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது.


மற்றொரு ரஷிய வீரரிடம், அயர்லாந்து உலக சாம்பியன் தோற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இவை அனைத்தும் நடுவர்களின் செயல்பாடு மோசமாக உள்ளதை தெரிவிக்கும் சம்பவங்கள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 


இதனிடையே இந்த சர்ச்சை தொடர்பாக சில அதிகாரிகளை நீக்கம் செய்துள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தெரிவித்துள்ளது. அப்போ நடந்தது என்ன விசாரணை நடக்குமா?



మరింత సమాచారం తెలుసుకోండి: