சிம்பு தற்போது அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். முதல் கெட்டப்பில் இவருக்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. 


இதையடுத்து அவர்  'மதுரை மைக்கேல்' என்ற பெயரில் இரண்டாவது கெட்டப்பில் நடிக்கவுள்ளார். இந்த காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 


இந்நிலையில் 'மதுரை மைக்கேல்'-இன் புகைப்படம் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று, இன்று இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கு சிம்பு அளிக்கும் விருந்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் இந்த படத்தை குளோபல் மீடியா தயாரிக்கிறது. இதில் சிம்பு, ஷ்ரேயா, விடிவி கணேஷ், மஹத், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: