சென்னை:
நாங்க சொல்றதை மட்டும் நம்புங்க... மற்றதெல்லாம் வதந்திதான் என்று மறுப்பு தெரிவித்துள்ளது இந்த படக்குழு.


எந்த படக்குழு என்று கேட்கிறீர்களா? சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் தலைப்பு 'துருவன்' என்று சமூக வலைத்தளத்தில் புயல் போல் ஒரு செய்தி பறந்தது. இதைதான் இந்த படக்குழுவினர் மறுத்துள்ளனர்.


முதற்கட்ட பல்கேரியா படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய படக்குழு சமூக வலைத்தளத்தில் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


"கண்டிப்பாக 'துருவன்' தலைப்பாக இருக்காது. நாங்கள் இன்னும் தலைப்பு ஆலோசனையில் இறங்கவில்லை. முதலில் படத்தின் பணிகளை முடித்துவிட்டுத்தான் படத்தலைப்பு பற்றி ஆலோசிக்க இருக்கிறோம்" என்று சொல்லிட்டாங்க...


இனிமேயாச்சும்... படக்குழு பேர் வைக்கட்டும்பா... நீங்க வைக்காதீங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: