'தில்லுக்கு துட்டு' திரைப்படத்திற்கு பிறகு சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராம் பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 


இதையடுத்து சந்தானம், இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் மணிகண்டன்


இதனை தொடர்ந்து, பெயரிடப்படாத இந்த படத்தை வாசன் விஷுவல்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. குடும்ப பாங்கான, காமெடி கதையை கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. 


இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: