சென்னை:
நம் தமிழ் மண்ணில் தயாரிக்கப்படும் சீரியல்களை தூக்கி விழுங்கும் டப்பிங் சீரியல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்று தங்களின் விரோதங்களை மறந்து ஒன்றுப்பட்ட சின்னத்திரை நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்து தங்களின் எதிர்ப்புகளை சேனல்களுக்கு உணர்த்தி உள்ளனர். இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி சற்று விளக்கமாகவே பார்ப்பதற்குதான்... இந்த சிறப்பு கட்டுரை...


இல்லத்தரசிகளின் இனிய விருப்பம்... வேறென்ன டி.வி. சீரியல்கள்தான். வீட்டுல சாப்பாடு சமைக்கிறாங்களோ... இல்லியோ... டிவி சீரியல்கள் ஓடாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒரு மோகம் சீரியல்கள் மீது பெண்களுக்கு... சாப்பாடு கூட சாப்பிட மறந்து டிவி சீரியல்களில் லயித்து போகும் பெண்களும் உண்டு. 


பட்டுப்புடவை எடுப்பதற்கு கூட பல நாட்கள் யோசிச்சு கலர், டிசைன் பார்த்து பார்த்து வாங்கும் பெண்கள் கூட இது அது எது என்று தரம் பிரிக்காமல் சீரியல்களை சட்டென்று பிடித்துக் கொண்டுள்ளனர். காலையில் வீட்டில் உள்ளவர் சாப்பிட்டு புறப்பட்டால் அக்கடா என்று உட்காரலாமா என்று அந்த காலத்தில் இருந்த பெண்கள் நினைப்பார்கள்.


இப்போதோ வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டாலும் சரி... இல்லாவிட்டாலும் சரி... சீரியலில் ஒரு சீன் கூட பெண்களுக்கு மிஸ் ஆகிவிடக்கூடாது. கதை புரியாதாம்... அட ஏங்க... வருடக்கணக்கில் நீளும் இந்த தொடர்களின் கதைகளை யாராவது முழுமையாக சொல்வீர்களா? என்ற கேள்வியை கேட்டீங்க... அம்புட்டுதான் அடுப்பாங்கரையில் இருந்து பூரிக்கட்டை பறந்து வரும் பாஸ்.

Displaying Sa 1.jpg


சேனல்கள் அதிகரிக்க காரணம்... பெண்களின் அமோக ஆதரவு சீரியல்களுக்கு கிடைத்ததுதான். டிஆர்பி ரேட்டிங்களில் முன்னிலை பெற்று விட்டால் அவ்வளவுதான் அந்த சீரியலுக்கு அமோக... கல்லா வசூல்தான். பெண்களின் மனதை அறிந்து சீரியல்கள் வந்த காலம் போய் இப்போது கொலை செய்வது எப்படி என்று விளக்கமாக கற்று தரவும், கருவை கலைக்க எந்த மாத்திரை போடணும் என்பதை சொல்லித்தரும் கல்விக்கூடம் போலவும் மாறிவிட்டது சீரியல்கள். 


இவற்றில் சில சீரியல்கள் நன்மைகளை ஆங்காங்கே தூவி... உழைப்பை விதைத்து அறுவடையை அள்ளுகின்றன. மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்ட கணவர்களின் எண்ணிக்கை இன்று டிபன் பாக்சில் ஆபீசுக்கே உணவை கட்டிக்கொண்டு செல்லும் நிலைமைக்கு உள்ளாக்கியது சீரியல்கள்தான்.


குடும்ப கதையில் ஆரம்பித்து க்ரைம் கதை வரைக்கும் எடுக்கப்படும் சீரியல்கள் பெண்களின் அமோக ஆதரவை பெற்றால் முதலிடம்தான். 

Displaying sa 6.jpg


இந்நிலையில்தான் சில சேனல்கள் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்  அடித்த சீரியல்களை டப்பிங் செய்து தமிழில் வெளியிட ஆரம்பித்தன. முதலில் ஏனோதானோவென்று பார்த்த பெண்கள் இப்போது அதற்கும் அடிமை ஆகி விட்டனர். இப்படி வேற்று மொழி சீரியல்களும் தமிழ் பேச வைத்த புண்ணியம் நம்ம சேனல்காரர்களையே சேரும். 


வாயசைவு சரியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை... சீரியல்கள் விறுவிறுப்பாக இருந்தால் போதும். கொஞ்சம் கண்ணீர், நிறைய திட்டு, பல பிரச்னைகள் இவற்றை கடந்து வந்தால் சுபம்... இதை நாங்க 4 வார்த்தைகளில் கூறிவிட்டோம். சீரியல்களுக்கு இதுதான் ஆண்டுக்கணக்கில் நீளும் வாய்ப்பை தருகின்றன.

Displaying sa 5.jpg


தமிழில் தயாரிக்கப்படும் சீரியல்கள் பிற மொழிகளில் ஹிட் அடிக்கிறதோ... இல்லையே... தமிழ் சேனல்களில் வரும் டப்பிங் சீரியல்களுக்கு நம்ம தமிழ் பெண்கள் கொடுக்கும் வரவேற்பு இருக்கிறதே அது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

Displaying sa 11.jpg


அப்போ... மண்ணின் மைந்தர்களை பிடிக்கவில்லையா... அல்லது வேறு காரணமா... எதுவாக இருந்தாலும் சேனல்களுக்கு அதன் வருவாய்தான் முக்கியம். இங்கு மொழியோ... நடிகர்களோ அவர்களுக்கு முக்கியம் இல்லை. கல்லா நிரம்பினால் போதும்... ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல எந்த சீரியல்கள் இழுவையாக இருக்கிறதோ... அதை நிறுத்தச் சொல்லி சேனல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் பறக்கும்... பின்னர் அந்த இடத்தை டப்பிங் சீரியல் ஆக்கிரமித்து கொள்ளும். வருவாய் அதிகரித்தால் அந்த டப்பிங் சீரியலுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். 

Displaying sa 8.JPG


ஆரம்பத்தில் இருந்தே சீரியல்கள் அட்டகாச வெற்றிப்பெற சன் டிவியே முக்கிய காரணமாக இருந்தது. இதில் வெளிவரும் சீரியல்கள் மகா, மெகா வெற்றிப்பெற்றது எல்லாம் வரலாறு. இதோட போட்டியிட முடியாமல் ராஜ் டிவி, விஜய் டி.வி. ஆகியவைதான் டப்பிங் சீரியல்களை முதலில் களமிறக்கி வெற்றிக்கனியை சுவைத்தன. இருப்பினும் சன் டிவியில் தொடர்ந்து தமிழ் சேனல்களே அதிகளவில் வந்தன. பெண்களின் ஆதரவும் அமோகமாக இருந்தது. இந்நிலையில் சன் டிவியும் டப்பிங் சீரியலை களமிறக்கியது. அதுதான் நாகினி என்ற நெடுந்தொடர்.

Displaying sa 3.jpg


இந்த தொடருக்கு பெண்கள் மட்டுமின்றி... ஆண்களும் அதிகளவில் பார்த்ததால் இப்போ இந்த தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அட இது நல்லா இருக்கே என்ற யோசனையில் வேறு சில சீரியல்களை கழற்றி விட்டுவிட்டு டப்பிங் சீரியலை கொண்டு வர சேனல் மும்முரமாக இயங்க... பற்றிக் கொண்டது சின்னத்திரை.


தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் "டப்பிங்" தொடர்களை கட்டுப்படுத்தக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டமே நடத்தி விட்டனர்.


இதை தொடங்கி வைச்சது யார் தெரியுங்களா? தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் சின்னத்திரையின் வெற்றி நாயகியாக வலம் வரும் நடிகை ராதிகா ஆகியோர்தான்.


இதில் நடிகர்-நடிகைகள் குஷ்பு, மனோபாலா, ரமேஷ்பாபு, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் சிவன் சீனிவாசன் கூறுகையில், ‘சமீப காலங்களாகவே டப்பிங் தொடர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ் தொடர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன் சின்னத்திரையை நம்பியிருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் டப்பிங் தொடர்களை கட்டுப்படுத்த சின்னத்திரையின் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். இதன் அடுத்தக்கட்டமாக சின்னத்திரை கலைஞர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி கோரிக்கை மனுவாக தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்’ என்றார். 


இந்த போராட்டத்தில் 500க்கும் அதிகமான சின்னத்திரை கலைஞர்கள் கலந்து கொண்டனர். 


அப்போ மோதல் வெடிச்சிடுச்சு... இனி டப்பிங்கா... நாங்களா... என்று களம் காண ரெடியாகிட்டாங்க... எது எப்படியோ... ஆண்களுக்கு காலை, மதியம், இரவு உணவு கிடைக்காம செய்யறதில் இந்த சீரியல்கள் செய்யும் சேட்டை  இருக்கே... சொல்லி மாளாது... நடத்துங்க... நடத்துங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: