'பைவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கனிகா, இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு ஷ்யாம் ராமகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் குடும்ப தகராறு காரணமாக, கணவரை விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைத்தளங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்தது.
இதை அறிந்த கனிகா, தற்போது கோபத்தில் பத்திரகாளி போல் உள்ளார். நான் என் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். திருமணம் செய்யும் போது ,அவரை எவ்வளவு காதலித்தனோ, அதே அளவு இப்போதும் அவரை காதலிக்கிறேன். நான் என் கணவரை பிரிய போவதாக வெளிவந்த செய்திகள், முற்றிலும் தவறானது.
இது மாதிரி பொய்யான செய்திகள் எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள்... இன்னும் தொடர்ந்தால், நான் நிச்சியம் நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறியுள்ளார்.