அறிமுக இயக்குனர் பி என் சி கிருஷ்ணா ஒரு பன்முகப்பட்ட கலைஞர், இயக்குனர் மற்றும் நடிகர். தனது திரைத்துறைப் பயணத்தை நாடக மேடைகளில் துவங்கி, திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் என அனைத்து தளங்களிலும், இயங்கி வருகின்ற ஒரு படைப்பாளி. குஸ்கா, சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.
இத்திரைப்படத்தில் கிஷோர் – சஸ்வதா இணையுடன், கே பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கல் ராவ், முல்லை தனசேகர், கோதண்டம், அம்பானி சங்கர், சேலம் சுமதி, அண்ணாதுரை கண்ணதாசன், படத்தின் இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் பலர் நடித்திருகின்றனர். வில்லனாக ஜெரால்ட் நடித்திருக்கிறார்.
எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார். சண்டைகாட்சி அமைப்புகளுக்கு ஓம் பிரகாஷ், ஸ்டில்ஸ் கே பி பிரபு, நடனம் ஜே ஜே சந்துரு, வடிவமைப்பு கம்பம் சங்கர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஃப் எம் கலைக்கூடம் தயாரிப்பில், கதை-திரைகதை-வசனம்-பாடல்கள் எழுதி, இசையமைத்து, பி என் சி கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.
click and follow Indiaherald WhatsApp channel