சென்னை:
யாராக இருந்தால் என்ன? விஜய்யின் குணமே தனிதான் என்கின்றனர் கோலிவுட் ஆளுங்க...


என்ன விஷயம் என்றால்... விஜய் யார் நல்லது செய்தாலும் மனதார பாராட்டுவார். அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ஆர்.கே.சுரேஷ் பாராட்டி தள்ளியுள்ளார்.


இவர் தயாரிப்பில் வெளிவந்த தர்மதுரை ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். 
இப்படத்தின் வெற்றியை அறிந்த விஜய் ஆர்.கே.சுரேஷை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.


இதில் இன்னொரு முக்கிய விஷயம் இருக்குங்க... என்ன தெரியுங்களா? ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகர் என்பதுதான். யார் ரசிகராக இருந்தால் என்ன பாராட்ட நினைக்கும் போது பாராட்டி விடணும் இல்லியா...  இந்த செய்தியை மிகவும் சந்தோஷமாக தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.



Find out more: