சென்னை:
ஆஸ்கர் நாயகனிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் அனிருத். எதற்காக தெரியுங்களா?
இளைய தலைமுறையினருக்கு ரொம்ப பிடித்தமான இசையமைப்பாளராக மாறியே விட்டார் அனிருத். இவரது இசை என்றால் ரசிகர்கள் செம ட்யூனாகி விடுகிறார்கள்.
இவர் இசையமைத்த சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் பாடல்கள் நேற்று இரவு வெளியானது. பாடல்களின் தாக்கம் இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது... அட அதாங்க... செம ஹிட் அடிச்சுக்கிட்டு இருக்கு.
இந்த பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன்... ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்புறம் என்ன இப்ப அனிருத்தும் செம ஹேப்பி மாமோய்...