சென்னை:
படத்தின் தலைப்பை போல் படம் ரிலீசும் இருக்கும் போல் உள்ளது என்று கோலிவுட்டில் ஒரு கதை உலா வருகிறது. என்ன தெரியுங்களா?


சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய லிங்கா படம் தோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இன்று வரை லிங்கா படத்தின் பிரச்னையை பலர் ஊதி பெரிசாக்கி வருகின்றனர். 


தற்போது ரஜினி நடித்த கபாலி படம் வசூலில் சச்கை போடு போட்டு வருகிறது. இதை வாங்கியவர்கள் அனைவரும் கோடிகளில்தான் கல்லாவை ரொப்பி உள்ளனர். இந்நிலையில் லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் சுதீப் நடிக்கும் முடிஞ்சா இவன பிடி படத்தை தயாரித்துள்ளார்.


ராக்லைன் வெங்கடேஷ்


இப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. ஆனால், லிங்கா படத்தின் நஷ்டம் இன்னும் சில இடங்களில் தரவில்லை என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் முடிஞ்சா இவனை புடி படத்திற்கு எதிராக களம் இறங்க உள்ளனராம. இதனால், படம் சொன்ன தேதியில் வருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: