ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு தற்போது 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மொத்தம் 3 கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். 


அதில் ஒரு கதாநாயகியாக ஷ்ரேயா நடிக்கிறார். தற்போது இன்னொரு கதாநாயகியை படக்குழுவினர் தேர்வு செய்து, அவரது பெயரை வெளியிட்டுள்ளனர். 


தளபதி உடன் தற்போது ஜோடி போட்டு நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தின் இன்னொரு கதாநாயகியாம். இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: