தமிழ்சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் தமன்னா தற்போது விஷாலின் 'கத்தி சண்டை', 'தேவி', 'பாஹுபலி 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் அவர் முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து 'ஏஏஏ' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவிற்கு, ஒரு கதாநாயகியாக நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார். 


கிராமத்து பெண்ணாக நடித்த ஷ்ரேயாவிற்கு நேர் எதிராக தமன்னா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இவர் படு கிளாமராக, இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம். இவர் நடிக்கவுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. 


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இசை பணிகளை யுவான்ஷாங்கர் ராஜா மேற்கொள்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: