சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர பரப்பண அக்ரஹார 4 ஆண்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் பணமாக கொடுத்து சிறைக்குள் உல்லாச சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்று கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி ரூபா தோலுரித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளிவந்தன. ரூபாவின் துணிச்சலையும், நேர்மையையும் பாராட்ட வேண்டிய அரசு மாறாக அவரை பணியிடமாற்றம் செய்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் அம்பு போல்
அவருக்கு மிரட்டல் வந்தது. கர்நாடக டிஜிபி ரூபா மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார். ஒரு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறார் நேர்மையான ரூபா.

ஆனால், இது அவருக்கு புதிதல்ல 13 ஆண்டுகளில் 37 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டாராம். எல்லாமே அவரது நேர்மைக்கு கிடைத்த நல்லப் பரிசு. கர்நாடக மக்களின் நிஜ ஹீரோயினாக டிஐஜி ரூபா இப்போது பார்க்கப்படுகிறார். இதுகுறித்து ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா கூறும்போது "எனது கதையை படமாக எடுக்கப்பட இருப்பதை நான் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படம் தயாராவதாக அறிகிறேன். ஆனாலும் இதற்கு அனுமதி அளிப்பது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" என்றார்.
click and follow Indiaherald WhatsApp channel