புதுடில்லி:
பள்ளி பஸ்சை இதற்கு பயன்படுத்தலாமா... மாணவனின் கடிதம் சமூக வலைதளங்களை அதிர்வுக்குள்ளாக்கி வைரலாக பரவி வருகிறது. என்ன விஷயம் என்றால்?


மத்திய பிரதேச மாநிலம், கந்த்வாவில், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் பிறந்த ஊரான பாப்ரா கிராமத்தில் பேரணி ஒன்றை துவக்கி வைக்க பிரதமர் செல்ல உள்ளார்.


இதற்காக அப்பகுதியில் உள்ள பள்ளி பஸ்களை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதுதான் தற்போது பெரிய விவகாரமாகி உள்ளது. இதையடுத்து அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படிக்கும் தேவனாஷ் ஜெயின் என்ற மாணவனிடம் ஆசிரியை, பள்ளி பஸ்கள் பிரதமரின் பேரணிக்கு செல்வதால், செவ்வாய் மற்றும் புதன் பள்ளி விடுமுறை என்று தெரிவித்துள்ளார். 


இதையடுத்து அந்த அந்த மாணவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளான். தனது கடிதத்தில் அவன் கூறியிருப்பதாவது, "பள்ளி வகுப்புகளை விட உங்களது கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா? அமெரிக்காவில் உங்களின் பேச்சுக்களை நான் கேட்டுள்ளேன்.


ஆனால் அவர்கள் இந்த கூட்டத்திற்கு பள்ளி பஸ்சில் வரவில்லை. ம.பி., முதல்வர் சிவராஜ் மாமாவிடம், பள்ளி பஸ்களை பேரணிக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூறுங்கள். எனது கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மோடியின் கூட்டத்திற்கு மக்கள் தாங்களாக வந்தார்கள். அழைத்து வரப்படவில்லை என பெருமை கொள்வேன்" என்று தெரிவித்துள்ளான். இந்த கடிதம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: