அமலா பால் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா போன்ற படங்களை இயக்கிய சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். சித்திக் இயக்கி, மலையாளத்தில் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கே இத்திரைப்படம் ஆகும். நடிகை மீனாவின் மகள் நைனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம், முதலில் ஜனவரியில் வெளியாவதாக இருந்தது. 



ஆனால் பல்வேறு காரணங்கள் காரணமாக தள்ளி சென்று மார்ச் இறுதியில் வெளியிட தேதி குறித்தனர் படக் குழுவினர். தமிழ் திரையுலக ஸ்ட்ரைக் காரணமாக மேலும் பாதிப்புக்குள்ளான இத்திரைப்படம் இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.



ஆனால் ஹாலிவுட் திரைப்படம் அவெஞ்சர்ஸ், சாய் பல்லவி நடிக்கும் தியா ஆகிய படங்கள் வெளியாவதால், போட்டியை  தவிர்க்க நினைத்து இறுதியாக, பாஸ்கர் ஒரு ராஸ்கல் மே 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு பயலே 2 படத்தை தொடர்ந்து, அமலா பால் இந்த படத்திலும் கவர்ச்சி மழை பொழிந்திருப்பதாக கூறப்படுகிறது. 


Find out more: