பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி பிறப்பால் ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர் பாலிவுட்டில் தான் பல படங்கள் நடித்து பிரபலமானார். சமீபத்தில் கூட பத்மாவதி படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி மெஹ்ருன்னிஸாவாக நடித்திருந்தார். இவர் சென்ற ஆண்டு தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிட படத்தின் மூலம் நீண்ட நாட்கள் கழித்து தமிழுக்கு வந்தார்.

Image result for aditi rao apherald

இந்த படத்தில் அதிதி பைலட்டாக நடித்த கார்த்தியின் காதலியாக வருவார். இப்பொழுது இவர் தனது தாய் மொழியான தெலுங்கில் அந்தரிக்ஷம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தெலுங்கின் முதல் விண்வெளி படம் ஆகும். இந்த படத்தில் இவர் ஒரு விண்வெளி வீராங்கனையாக நடிக்க உள்ளார்.

Related image

கதாநாயகன் வருண் தேஜ் ஒரு ஆஸ்ட்ரோநாடாக நடிக்க அவரோடு சேர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளும் பெண்ணாக ஆடி நடிக்கிறார். இந்நிலையில் அதிதியின் முதல் தெலுங்கு படமான சம்மோஹனம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அதிதி சமீரா என்ற சினிமா நடிகையாக நடிக்க உள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: