காந்திநகர்:
அமைச்சரே இப்படி செய்தால் வரலாறு உங்களை மன்னிக்குமா? யானைக்கு ஸ்பெல்லிங் மறந்திடுச்சா...? 
குஜராத் அமைச்சர் சங்கர் சவுத்ரி, பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் நடத்திய போது எடுத்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரலாற்றின் பக்கத்தில் இவர் இடம் பிடிச்சிட்டார் போங்க.


குஜராத் மாநில நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்பநலம் மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் சங்கர் சவுத்ரி. இவர் இங்குள்ள திஷா பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அட ஆய்வுக்கு போனவர் அதை மட்டும் செய்திருக்கலாம் அல்லவா? இங்குதான் அவருக்கு காத்திருந்தது ஒரு "ஆப்பு". இது அவரே அவருக்கு வைத்துக் கொண்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவதாக கூறி, E-L-E-P-H-A-N-T என்பதற்கு பதிலாக E-L-E-P-H-E-N-T என எழுதியுள்ளார்.


எம்.பி.ஏ., பட்டம் பெற்ற அமைச்சர் ஒருவர் ELEPHANT என்பதில் A-க்கு பதிலாக E என்று எழுதியதை கண்டு அதை போட்டோ எடுத்த யாரோ ஒரு புண்ணியவான்... அமைச்சரின் ஆங்கில அறிவு இம்புட்டுதான் போலிருக்குன்னு நினைச்சு... அதை இன்டர்நெட்டில் விட, அது இப்போது வைரலாகியுள்ளது.


சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த குற்றச்சாட்டும், போலியாக எம்.பி.ஏ., பட்டம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டும் இவர் மீது ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போ குற்றச்சாட்டு உண்மைதான் போலிருக்கு.



మరింత సమాచారం తెలుసుకోండి: