என்ன அருகதை உள்ளது... முதல்வரின் காட்டமான கணைகள் திமுகவின் மீது பாய்ந்தன இன்றைய சட்டபேரவை கூட்டத்தில்.
கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவிற்கு அருகதை கிடையாது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததும், மீனவர்கள் படும் துயரத்திற்கு காரணமானதும் திமுகதான் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார். 


சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்தது. ஆரம்பமே காட்டம்தான் போங்க. அப்படி என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?


1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார் ஒரு கேள்வியை திமுக உறுப்பினர் பொன்முடி. இதுதான் காட்டத்திற்கு அஸ்திவாரம் எழுப்பியது. இவருக்கு பதில் அளித்தது முதல்வர் ஜெயலலிதா. என்ன சொன்னார் தெரியுங்களா?
திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அப்போது கருணாநிதி என்ன செய்தாருங்க. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க கருணாநிதி ஏன் கொடுக்க அனுமதித்தார். கச்சத்தீவு குறித்து பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்று ஆவேசமாக பேசினார்.


அப்புறம் என்ன வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர். தொடர்ந்து முதல்வர் பேசுகையில், கச்சத்தீவ மீட்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் திமுக இணைத்து கொள்ளாதது ஏன்? என்று கேட்க இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்  திமுக பொருளாளர் ஸ்டாலின்.


கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக இருந்த கருணாநிதி கடிதம் எழுதினார். அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார். இப்படி முதல்வருக்கும், எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதத்தை ஏறப்டுத்த கச்சத்தீவு காரணமாக அமைந்து விட்டது. எப்படியோ வெளிநடப்பு செய்யாமல் விவாதத்தில் கலந்து கொண்டனர் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: