மதுரை:
திமுக பொருளாளர் ஸ்டாலின், தமாகா தலைவர் வாசன் இருவரும் மதுரையில் திடீரென சந்தித்து வெகுநேரம் உரையாடியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எதிர்பாராமல் நடந்த ஒன்றா? அல்லது வேறு ஏதேனும் என்ற யூகங்கள் பரபரக்கின்றன.


தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும், த.மா.கா. முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தனின் பேரனுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இதனால் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமாகா தலைவர் வாசன் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்றனர்.


ஜி.கே.வாசன் முன்பே வந்திருந்தார். ஸ்டாலின் வருகிறார் என்பதை அறிந்ததும் அவரே நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த பேச்சு வெகுநேரம் நீடித்தது. மக்கள் நலகூட்டணியில் இருந்து வெளியேறிய த.மா.கா. உள்ளாட்சி தேர்தலில் என்ன செய்ய போகிறது என்று தெரியாத நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வெகுநேரம் பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தமாகா, திமுகவுடன் இணையுமா என்று பல யூகங்கள் பரவ ஆரம்பித்துள்ளது. அப்போ... திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் என்ன சொல்லும்.. தெரியலையேங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: