கோவை:
இணையத்தில் உலா வரும் விளம்பரங்கள்... அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பாதுகாக்கப்பட்ட கோவை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விதிமுறைகளை மீறி ஆடம்பர சொகுசு தங்குமிடங்கள் நடத்தப்படும் தகவல் வெளியாகியுள்ளதுதான் அந்த அதிர்ச்சி.
பகலிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் எவ்வித அனுமதியுமில்லாமல் புதிய கட்டுமானங்களை அமைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. திறந்த வெளிகளில் மதுகுடிக்கலாம். இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் விலங்குகளைக் காண வாகனத்தில் அழைச்சுட்டு செல்கிறோம் என்று கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விளம்பரங்களும் முகநூல், இணையதளங்களில் உலா வருகிறது. இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டபோது, புலிகள் காப்பகத்திற்க்குள் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சொல்றாங்க. உண்மை என்னங்க...? சீக்கிரம் வெளியில் வருமா!