காயல் நடிகை தற்போது பிரகாசமான நடிகர் உடன் ஒரு புது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரை இயக்குனர் கவர்ச்சியாக நடிக்க சொல்லி வற்புறுத்துகிறாராம். 


இயக்குனருக்கு பலமுறை நோ சொல்லியும், அவர் திரும்ப திரும்ப கேட்பது  காயல் நடிகைக்கு எரிச்சல் உண்டாக்கியது. இதனால் அவர் இயக்குனரை கோபமாக திட்டிவிட்டாராம். 


மேலும் இயக்குனரிடம் காயல் நடிகை, எனக்கு கவர்ச்சி செட்டாகாது. இப்படி நடிக்க சொல்லி டார்ச்சர் செய்தால், படத்திலிருந்து பாதியிலே விலகி விடுவேன். அப்புறம் நீங்க வேறு நடிகையை வைத்து தான் படம் எடுக்க வேண்டும். எப்படி... சம்மதமா... என்று கேட்டுள்ளாராம். 


அதன் பிறகு இயக்குனர், கப்-சிப் ஆகி, வேணாம்மா நீங்க உங்கள் பாணியிலையே நடிங்க... என்று கூறிவிட்டாராம்.. 


మరింత సమాచారం తెలుసుకోండి: