புதுடில்லி:
பசிப்பது கூட மறந்துவிடும் போல்... ஆனால் பறப்பதை மறக்கார் என்ற கமெண்ட் நமது பிரதமரை நோக்கி நெட்டிசன்கள் வீசிவதுதான். இப்போ... வரும் செப்டம்பர் மாதம் வியட்நாமிற்கு பறக்கிறாராம் நம் பிரதமர்.


15 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிரதமர் மோடியின் வருகை, இருநாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். தென் சீனக்கடல் தொடர்பான பிரச்னையில் இந்தியாவின் நிலையை வரவேற்பதாகவும் வியட்நாம் கூறியுள்ளது.


இந்த பயணத்திற்கு பின் பிரதமர் மோடி சீனாவிற்கும், லாவோஸ் நகருக்கும் செல்ல உள்ளார். சீனாவின் குவாங்சு நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இதுகுறித்து டில்லியில், இந்தியாவிற்கான வியாட்நாம் தூதர் டோன் சின் டன் கூறுகையில், தென் சீன கடல் பிரச்னை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பிரதமர் மோடியின் பயணம் விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறோம். பிரதமர் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தென் சீன கடல் பிரச்னையில், இந்தியாவின் நிலையை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.



Find out more: