கோலிவுட் நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் பாலசரவணன் இருவரும் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 'ராஜமந்திரி' திரைப்படத்தில் நடித்தனர்.
இதையடுத்து தற்போது இன்னொரு திரைப்படத்தில், இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனராம். 'தெறி' இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி தற்போது ஒரு புது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் காளி வெங்கட் மற்றும் பாலசரவணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கில், நேற்று பங்கேற்றுள்ளனர். அதில் இருவரும் வயதான தோற்றத்தில் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவாற்றவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.