புதுடில்லி:
போச்சே... போச்சே... அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும், கனவும் போயே போச்சே என்று வேதனைப்பட்டுள்ளார் இவர்.
யார் இவர் தெரியுங்களா? அன்னா ஹசாரேதான் அவர். இவர் யார் மீது நம்பிக்கை வைத்திருந்தாராம்... செய்தியை பாருங்க...
அரவிந்த் கெஜ்ரிவால் மீது வைத்திருந்த நம்பிக்கையும், கனவும் தகர்ந்து விட்டது என அன்னா ஹசாரே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
லோக்பால் தொடர்பான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுடன் நெருக்கமாக இருந்து பின்னர் விலகி அரசியல் கட்சி துவக்கியவர் தற்போதைய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இவரது அமைச்சரவை சகாக்கள் மீது பல்வேறு புகார்கள் வந்து பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைதான் அப்படி வருத்தமாக தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரே கொடுத்த பேட்டியில் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?
அரசியல் கட்சியில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பார்க்க முடியாத அளவிற்கு சேர்ந்து விடுவார் என்றே நான் முன்பு அவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தேன். கெஜ்ரிவால் மீது நான் அதீத நம்பிக்கை வைத்திருந்தேன்.
ஆனால் சமீபத்திய முறைகேடுகள், ஊழல் மற்றும் அவதூறான புகார்கள் எனக்கு கவலை அளிக்கிறது. அவரது சகாக்கள் மோசடியில் ஈடுபடுவதும், ஜெயிலுக்கு போவதுமாக உள்ளனர். இவரது அரசியல் வித்தியாசப்படும் என்ற எனது கனவு தகர்ந்து விட்டது. பிற கட்சிகளுக்கும் இவரது கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.