கோவை:
வேதனை.... வேதனை... வேதனை... என்று நீதிபதியே வேதனையடையும் சம்பவம் நடந்துள்ளது.


எங்கு தெரியுங்களா? புலன் விசாரணை சரியில்லாத காரணத்தினால் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பலர் விடுதலையாகின்றனர் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கவலைப்பட்டதுதான் தற்போது ஹாட் டாக் ஆப் சிட்டியாக உள்ளது.


கோவையில் நடந்த மேற்கு மண்டல புலனாய்வு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில்தான் இப்படி தன் வேதனையை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறியது: சரியான தீர்ப்புகளை கோர்ட்டால் மட்டும் வழங்க முடியாது. போலீசாரின் பங்கு  ரொம்ப அவசியம். புலனாய்வு சரியில்லாததால் பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பலர் விடுவிக்கப்படுகின்றனர்.


இந்த நிலை தொடரும் போது மக்கள், கட்டப்பஞ்சாயத்தை நாடி செல்ல வேண்டியதாகி விடும். இதில் மாற்றம் கொண்டு வர போலீசாருக்கு ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம். போலீசார் தொழில்நுட்பம், புதிய சட்டம் , புதிய தீர்ப்புகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு சிறப்பாக செயல்படும் போது உண்மையான நீதி கிடைக்க வழி பிறக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: