ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருநங்கைகளை வட இந்தியாவில் இவர்களை சக்தியின் உருவாகவே கருதுகின்றனர்.

திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக கொண்டாடப்படுவது தான் கூத்தாண்டவர் திருவிழா.இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.இத்திருவிழாவில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, சிக்கிம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும், தாய்லாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொள்வர்.

15 நாள்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் கடைசி 2 நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்களின் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காகவே உள்ளூர் மக்களும் அங்கு திரளுவர்.பாவனை, புத்தி கூர்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு கிரீடங்கள் வழங்கப்படும்.தமிழகம் சேர்ந்த அழகியை மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுத்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel