சென்னை:
ரஜினி ரசிகர்களிடம் சந்திரமுகி ஞாபகம் இருக்கான்னு கேட்டா உதைக்கவே வருவாங்க. ஏன்னா 2005ல் வெளியாகி சூப்பர் டூப்பர் அடித்த படமல்லவா. படத்தை பற்றி கேட்கலை. அந்த படத்துல வந்த ஒரு குட்டி பொண்ணுதான் விஷயம்.


என்னன்னா? இந்த சந்திரமுகியில் பொம்மி என்ற பெயரில் குண்டா ஒரு பாப்பா நடிச்சுச்சே ஞாபகம் இருக்கா... அவங்க பேரு பிரகர்ஷிதா. இந்த குட்டி பொண்ணு சிம்ரன் கூட அனுவும் நானும் சீரியலில் நடிச்சார். அப்புறம் என்ன பெரிய கேப்தான்.  படிப்பில் கவனம் செலுத்திய அந்த குட்டிப்பாப்பா இப்போ பெரிய பொண்ணு.


தற்போது இவர் எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல பிஎஸ்சி எலக்ட்ரானிக் மீடியா செகண்ட் இயர் படிக்கிறாராம். அடுத்து பிஜி முடிச்சிட்டு சினிமாவில மறுபடியும் களமிறங்குவாராம். இப்ப இவங்க சைல்ட் ஆர்ட்டிஸ்ட் இல்ல... ஹீரோயினா களம் இறங்குவார்ன்னு தெரியுது... பார்ப்போம். பொறுத்திருந்து பார்ப்போம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: