பிரபல கிரிக்கெட் வீரர் முகம்மது கைப் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போல போட்ட ஒரு புகைப்படத்தை வைத்து சிலர் சர்ச்சையாக்கி விட்டனர். செஸ் விளையாட்டு இஸ்லாமில் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

அதை கைப் கண்டிப்பாக விளையாடக் கூடாது. இனிமேல் அதை விளையாட வேண்டாம் என ஒருவர் கைப் பேஸ்புக்கில் கமெண்ட் போட அதைத் தொடர்ந்து பல விதமான வாதப் பிரதிவாதங்கள் வெடித்து அனலைக் கூட்டி விட்டன. முகம்மது கைப் முன்பு ஒரு சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற படத்தைப் போட்டபோதும் இதேபோல பல விதமான விவாதம் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு விளையாட்டை சும்மா விளையாடியதற்காக புகைப்படம் போட்டு அதனால் வந்து குவிந்த அநாவசிய கமெண்டுகளைப் பார்த்து நிச்சயம் கைப் அசந்துதான் போயிருப்பார்.
click and follow Indiaherald WhatsApp channel