ஐதராபாத்:
ஒரு பக்கம் கபாலி பட்டையை கிளப்பினால் சீன மொழியில் டப் செய்யப்பட்ட பாகுபலி ஜாக்கிசானையை தூக்கிப்போட்டு சாப்பிட்டுள்ளது.
பாகுபலி திரைப்படம் நேற்று சீனா முழுவதும் 6000 தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்திற்கு சீனர்கள் கொடுத்த ஆதரவு இந்த படத்துடன் வெளியான ஜாக்கிசான் படத்திற்கு கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடி மன்னன் ஜாக்கிசானையை தூக்கி விழுங்கிடுச்சு நம்ம பாகுபலி. ஜாக்கிசான் நடித்த ஸ்கிப்டிரேஸ் படத்தை விட பாகுபலிக்கு விமர்சகர்களும் அதிக மதிப்பெண் கொடுத்துள்ளனர். இதனால் வசூலில் கல்லாவே உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் இந்திய படமான 'பிகே' சீனாவில் வெளியானபோது 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பாகுபலி தாண்டும் என்கின்றனர். வாழ்த்துக்கள்.