தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி, ‘வம்சம்’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பழம்பெரும் நடிகர் 'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரானின் பேத்தி தான்யா இப்போது நடிக்க வந்திருக்கிறார். மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அவர் அறிமுகமாகிறார். 


அபிராமி என்ற இயற்பெயரை தான்யா என்று மாற்றியவரும் மிஷ்கின் தான். மிஷ்கின் படம் தொடங்குவதற்கு முன்பே அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் தான்யா. 'மொழி', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற படங்களை இயக்கிய ராதாமோகன் கடைசியாக 'உப்பு கருவாடு' படத்தை இயக்கினார். தற்போது அவர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க தான்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 


'சேதுபதி' படத்தை தயாரித்த வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பொன்.பார்த்திபன் வசனம் எழுதுகிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: