சென்னை:
சூப்பர்ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகர் சிவகார்த்திகேயன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்போது இவர் ரஜினி வழியை பின்பற்ற போகிறாராம்.
என்ன வழி தெரியுங்களா? கபாலி படம் உலகம் முழுவதும் பாப்புலர் ஆவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ஒருவர்.
அவரின் விளம்பரங்களால் தான் படம் மிகப்பெரிய ரீச் ஆனது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பப்படுகிறாராம்.
தாணுவும் ஓகே சொல்ல அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.