சென்னை:
முதல்முறையாக இவருடன் கூட்டணி போட்டுள்ளார் அவர் என்கிறது  கோலிவுட் வட்டாரம். யார் தெரியுங்களா அவர்?


வேறு யாரு. ஆரம்பம் என்னவே வில்லனாக ஆரம்பித்து இப்போ காமெடியில் அதகளம் செய்யும் மொட்டை ராஜேந்திரன்தான் அவரு. யாரோட கூட்டணி போட்டு இருக்கார் தெரியுங்களா?


சிம்பு இப்போ 3 கெட்டப்புல நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில்தான் முதல்முறையாக காமெடி வேடத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யுடன் 'தெறி' மற்றும் அஜித்துடன் 'வேதாளம்' ஆகிய படங்களில் தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்ற ராஜேந்திரன் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்குவார் என்கிறார்கள்.


இப்போ வெளி வர்ற பெரிய நடிகர்கள் படம் முதல் கொண்டு சின்ன பட்ஜெட் படம் வரைக்கும் 10ல் 7 படங்களில் மொட்டை ராஜேந்திரன் இருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: