சென்னை:
ஒத்தி வைங்க... அவரு வர்றாரு... இது யார் சொன்னது தெரியுங்களா? எதை ஒத்தி வைத்தார்கள் தெரியுங்களா?


பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தொடரி. இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கு. இதனை தயாரித்தது சத்யஜோதி நிறுவனம். 


போன மாதமே பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்திய தயாரிப்பு நிறுவனம், படத்தை இந்த மாதம் வெளியிட முடிவு செய்திருந்தது. இங்குதான் நடந்தது ஒரு டுவிஸ்ட். என்னன்னா?


இந்த மாதம் 22ம் தேதி கபாலி படம் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் இந்த படம் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அதனால் தனுஷ் தனது மாமனாரின் படம் வெளிவருவதால் தொடரி படத்தை இப்போது ரிலீஸ் செய்யவேண்டாம். அடுத்த மாதம் செய்யலாம் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாராம்.


அதுவும் சரிதானே... கபாலி படம் ரிலீஸ் ஆவது உறுதியானதால் தமிழில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதியே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே! அதனால் தொடரி அடுத்த மாதத்தில்தான் வெளியாகும் என்று தெரிகிறது.


Find out more: