
ஆந்திராவை சேர்ந்த சிவா, நாகலட்சுமி, பவானி எழும்பூரில் வேலைபார்த்து வருகின்றனர், வேளச்சேரியில் தங்கி உள்ளனர். இவர்கள் 3 பேரும் ஒரே டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன் சைதாப்பேட்டையில் இருந்து நந்தனத்துக்கு ஒரு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.அதன் அருகில் பைக்கில் ஒருவர் கொண்டிருந்தபோது, பஸ்சுக்கும் பைக்குக்கும் நடுவில் நுழைந்து பைக்கை முந்தி செல்ல பெண்கள் முயன்று தடுமாறி 3 பெண்களும் பஸ்சின் சக்கரத்தில் விழுந்தனர்.
விழுந்ததை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்ஸை இயக்க,பவானி, நாகலட்சுமி தலை, சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா படுகாயம் அடைந்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரணையை கையில் எடுத்தனர்,படுகாயமடைந்த சிவாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel