கேரளா:
ஐயோ... போச்சே... வடை போச்சே... இல்லீங்க... வசூல் போச்சேன்னு புலம்பல் குரல் கேட்கிறது.


கேரளாவில் கபாலி படம் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் "கசாபா" படத்தின் வசூல் கசாப்பு கடைக்கு போன ஆடு போல ஆகிவிட்டது. அட துண்டு துண்டா போயிடுச்சுப்பா... கபாலி என்ற டிரோனசர் ஆட்டை அடித்து விழுங்கிடுச்சாம். 


கபாலியின் கேரள திரையரங்கு விநியோக உரிமையை எடுத்துள்ளது நடிகர் மோகன்லால். கேரளாவில் புதுப்படங்கள் வெளியிடும் தியேட்டர்களின் எண்ணிக்கை எண்ணவே 450க்குள்தான். இதில் 306 தியேட்டர்களை கபாலி அசால்ட்டாக கைப்பற்ற ரம்ஜானுக்கு வெளியான மம்முட்டியின் "கசாபா" படம் வசூலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கசாபா ஓபனிங் வீக் எண்டில் 7.4 கோடிகள் வரை வசூலித்து சாதனைகள் செய்தது என்றால்... கபாலி அதை அசால்ட்டாக அடித்து விழுங்கும் என்று தெரிவிக்கின்றனர். கபாலிடா... சேட்டா அவர் கபாலிடா... என்று ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: