'உல்லாசம்' திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்திராத நிலையில், தற்போது இருவரும் ஒரே நேரத்தில், தங்கள் புது படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அஜித் தனது 57-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில், வரும் ஆகஸ்ட் மாதம் கலந்துக் கொள்ள உள்ளார். 


அதே போல், நடிகர் விக்ரம் 'கருடா' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். திரு இயக்கவுள்ள கருடா திரைப்படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, இதன் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்குவதாக இருந்தது. 


அதற்கிடையில், காஜல் கர்வால் அஜித்தின் 57-வது திரைப்படத்தில் புக்காகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் பெல்கிரியாவில் தொடங்குகிறது.  அதே நேரத்தில்,  'கருடா' திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதால், அவர் இந்த படத்திலிருந்து விலகியுள்ளார். 


'கருடா' படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆனதால், 'தல 57' திரைப்படத்தில் நடிக்க, இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கால் சீட் கொடுத்துவிட்டேன் அதனால் இனி மாற்றம் செய்ய முடியாது என்று கூறி அவர் கருடா திரைப்படத்திலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: