மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி , கதிர் நடிப்பில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம் வேதா. அதிரடியான என்கவுண்டர் காவல்துறை அதிகாரி விக்ரமாதித்யனாக மாதவனும், மிரட்டலான தாதா வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் , ஷ்ரத்தா, பிரியா எனும் கதாப்பாத்திரத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தில் வக்கீலாக வரும் இவர், நிஜ வாழ்விலும் நடிக்கவரும் முன் வக்கீலாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் வேதா வரும் வெள்ளிக்கிழமை உலகெங்கும் வெளியாகிறது.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரையும் அறிமுகம் செய்யும் "விக்ரம் வேதாவின் உலகம்" காணொளி இதோ :
click and follow Indiaherald WhatsApp channel