சென்னை:
என்னப்பா....சிம்பு...வம்பு பண்றதுக்காகவே இறங்கிட்டீங்களா? சொல்லுங்கப்பா... என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். என்ன காரணம் தெரியுங்களா?


சிம்பு நடித்து வரும் அ...அ...அ... படத்தில் அவருக்கு மூன்று கெட்டப் உள்ளது. அதில் மதுரை மைக்கேல் கெட்டப் ஏற்கனவே வெளிவந்து விட்டது. அடுத்த கெட்டப் பற்றியும் சொல்லிட்டாங்க... அஸ்வின் தாதா என்ற 60 வயசு கெட்டப். 


இதில்தான் சிம்பு வம்பு பண்ணுகிறார் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள். காரணம டுவிட்டரில் சிம்பு திரும்பி நிற்கும் போஸ் கொண்ட படம் உலா வருகிறது. அதில் பார்க்க படையப்பா ரஜினியின் வயதான கெட்டப் போலவே இருக்கிறது. இதனால்தான் ரஜினி ரசிகர்கள் டென்ஷனாகி இருக்கிறார்கள். புதுசா எதையாச்சும் யோசிங்கப்பா....


మరింత సమాచారం తెలుసుకోండి: