பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா மிகவும் நேர்த்தியான அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தமன்னா அட்டகாசமான டிசைனர் உடை அணிந்து வந்தார். அனுஷ்காவோ பட்டுப்புடவையில் அம்சமாக அடக்கமாக வந்திருந்தார்.அனுஷ்கா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பச்சை நிற பட்டுடுத்தி சிம்பிளாகவும் அம்சமாகவும் அழகாகவும் வந்திருந்தார்.

அவர் வெயிட் போட்டிருந்தாலும் அதுவும் அழகு தான் என்கிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள்.நிகழ்ச்சியில் அனுஷ்காவும், பிரபாஸும் அருகருகே நாற்காலியில் அமர்திருந்தனர். அவர்களை ஜோடியாக பார்த்த ரசிகர்கள் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக வேண்டும் என்று தங்களது விருப்பம் தெரிவித்துள்ளனர்
click and follow Indiaherald WhatsApp channel