இன்று பரப்பன அக்ரஹார சிறையில் சின்னம்மா சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளார். அதிமுகவின் அதிகார மையம் யார் என்பது தொடர்பான பிரச்சனையால் தற்சமையம் தமிழக அரசியலில் மீண்டும் விரியம் கொண்டு அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்துக்கு அனைவரும் வருமாறு டிடிவி தினகரன் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணி இன்று தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த பரபரப்பான நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நாளை சசிகலாவை சந்திக்கவுள்ளார்.

அப்போது கட்சியையும் ஆட்சியையும் தங்களின் கைபொம்மை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து திவிரமாக ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel