ரஜினிகாந்த், அஜீத், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் சகட்டுமேனிக்கு பாராட்டியுள்ளார் நடிகை சயீஷா. ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் பக்கம் வந்துள்ளவர் சயீஷா சைகல். வனமகன் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

இந்நிலையில் சயீஷா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட அதிரடி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்த கேள்வி, பதில் விபரம் வருமாறு,தலைவர் ரஜினி பற்றி சில வார்த்தைகள் என்று கேட்ட ரஜினி ரசிகருக்கு லெஜண்ட், மரியாதைக்குரியவர் என்று தடாளடி பதில் அளித்துள்ளார் சயீஷா.

விஜய்யை பற்றி கேட்ட ரசிகருக்கு சூப்பர்ஸ்டார் மற்றும் கிங் என்று பன்ச் பதில் அளித்துள்ளார் சயீஷா.சிம்பு பற்றி சில வார்த்தைகள் என்று ரசிகர் கேட்டதற்கு, சூப்பர்ப்! அருமையான நடிகர் என்று வருணித்து தெரிவித்துள்ளார் சயீஷா.
click and follow Indiaherald WhatsApp channel