திருமணமாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. 2015-ம் ஆண்டு அவர் நடித்த 36 வயதினிலே படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து இப்போது எல்லாரும் எதிர்பார்க்கும் மகளிர் மட்டும் படம். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் நடித்தது குறித்து ஜோதிகாவின் பேட்டி இது.

நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு முக்கிய காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பெரிய பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. மகன் தேவுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ.... நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவுக்கு ஹீரோவாக நல்ல இமேஜாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
click and follow Indiaherald WhatsApp channel