
பின் சுப்ரமணியபுரம் ஜெய்க்கு பெரிய விசிட்டிங் கார்டாக அவருக்கு அமைந்தது. ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் ஒரு பேட்டியில் கிண்டலாக வாய்க்கொழுப்பாக 'நான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் வாமனன் மட்டும்தான் ஓடும்' என்று சொல்லி மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஒட்டு மொத்த வயிற்றில் நெருப்பைக் கொட்டினார். விளைவு எங்கேயும் எப்போதும் ஹிட்டுக்கு பின்னர் கூட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக படங்கள் இல்லை.

ஒருவழியாக ராஜா ராணி வந்து கை கொடுத்தது. இப்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கும் ஜெய் தனது படங்களின் தயாரிப்பாளர்களை படுத்தும் பாடு சொல்லி மாளாது படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டார். இப்போது ஜெய்யின் குணம் காரணமாக ஜெய் - அஞ்சலி காதலும் முழுவதுமாக பிரேக் அப் ஆகிவிட்டது. எப்போதும் குடியுடன் இருக்க அதற்கேற்ற குடி நண்பர்களாக தேடிக்கொண்டார் ஜெய். நேற்று முன் தினம் அப்படி அதீத போதையில் கார் ஓட்டி அதனை போலீஸ் வைத்திருந்த பேரிகார்டுகளில் முட்டி மோதி இப்போது வழக்குக்கு ஆளாகி இருக்கிறார். இது இரண்டாவது முறை என்பதால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
click and follow Indiaherald WhatsApp channel