இயக்குனர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் மற்றும் பல்வேறு இந்திய, உலக இயக்குனர்களோடு எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் 5 தேசிய பெற்றவர். மேலும் பிலிம் பெடரேசன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும், இந்திய தேசியவிருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா, இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்பு  வகித்தவர். 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவர்.
Image result for EV Ganesh Babu's Kattill

கட்டில் திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே “யமுனா” என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் தமிழின் பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தவர், சர்வதேச விருது பெற்ற பல படங்களில் இவரது பங்களிப்பு உள்ளது. “கட்டில்” படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு இந்த படத்தைப்பற்றி கூறும்போது "நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இளைய தலைமுறைக்கு குறிப்பாக இணைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக“கட்டில்” திரைப்படம் இருக்கும்.



இந்திய திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் ஜனரஞ்சகத்தோடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்" என்று கூறினார்.
இந்திய திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் ஜனரஞ்சகத்தோடு அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்" என்று கூறினார். இதன் நடிக, நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வரும்" என்று கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: