சென்னை:
நன்றி சிவா... என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியதற்கு என்று டுவிட்டரில் ட்விட் போட்டுள்ளார் ரெமோ தயாரிப்பாளர். எதற்காக இந்த நன்றி தெரியுங்களா?


சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் வரும் 5ம் தேதி வெளியாகிறது. அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பித்துள்ளனர். 


இதைப் பார்த்த பின்பு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள டுவிட்தான் இது.


 ''ரெமோ படம் பார்த்தேன். இந்த படத்தை தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். படம் பார்த்த பின் இயக்குனர் பாக்கியராஜ் கன்ணனுக்கு அடுத்த படத்துக்கான முன் தொகையை கொடுத்துவிட்டேன். நான் எப்போதும் சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோருக்கு நன்றி கூறமாட்டேன். ஆனால் முதன்முறையாக இப்போ நன்றி சொல்கிறேன். ஏனெனில் அவர் இப்படத்தின் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார். நன்றி சிவா” என்று தெரிவித்துள்ளார். 


தயாரிப்பாளரின் இந்த டுவிட் ரசிகர்கள் மத்தியில் மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.



Find out more: